பாஜகவின் உண்மையான தொண்டராக செயல்படுவேன்- காயத்ரி ரகுராம் கருத்து


பாஜகவின் உண்மையான தொண்டராக செயல்படுவேன்-  காயத்ரி ரகுராம் கருத்து
x
தினத்தந்தி 22 Nov 2022 12:57 PM IST (Updated: 22 Nov 2022 4:33 PM IST)
t-max-icont-min-icon

பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாகவும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்தநிலையில், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினாலும், பாஜகவின் உண்மையான தொண்டராக செயல்படுவேன் என பாஜக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story