ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அகற்றப்படும் - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி


ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் அகற்றப்படும் - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி
x

ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அருணை பொறியியல் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அருணை பொறியியல் கல்லூரி சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிப்பட்டு மற்றும் தென்மாத்தூர் இடையே அமைந்துள்ள பெரிய ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியின் சுற்றுச்சுவர் கட்டுப்பட்டுள்ளதாக கூறி, திருவண்ணாமலையை சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில், மனுதாரர் அறநிலையத் துறைக்கு சொந்தமான 23 ஆயிரம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்திருந்ததாகவும், 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், மனுதாரர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தாசில்தார் தலைமையிலான குழு மனுதாரர் குறிப்பிடும் இடத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Next Story