மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை


மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
x

குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாணவர்கள் சீருடையில் மனு கொடுக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளி சீருடை அணிந்தபடி மாணவ-மாணவிகள் மனு கொடுப்பதற்காக தற்போது அதிக அளவில் வருகை தருகின்றனர். இவர்கள் கல்வி உதவித்தொகை, தாய் அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கோரியும், தங்கள் பள்ளிக்கு பஸ் வசதி உள்ளிட்டவை கோரி மனு கொடுக்க பள்ளி நாட்களில் தங்களது பெற்றோர் அல்லது பொதுமக்களுடன் வருகின்றனர். இந்த நிலையில் இவ்வாறு சீருடையில் மனு கொடுக்க வருவதை தவிர்க்க மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும். அவ்வாறு தவறி மீண்டும் மாணவர்கள் மனு கொடுக்க வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத்தில் அனைத்து தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் தற்போது தலைமை ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story