பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின்மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்


பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின்மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்
x

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 30 (1) -ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக காஞ்சீபுரம் மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியாக கணேசன் என்பவர் கடந்த 10.3.2022 முற்பகல் முதல் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மேற்கண்ட குறை தீர்ப்பு அலுவலரை கூடுதலாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (கி) குறித்தான குறைகளை நிவர்த்தி செய்திட பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறைதீர்ப்பு அதிகாரியான கணேசன் என்பவரை 8925811309 மற்றும் 9962986168 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஏதாவது புகார் அளிக்க விரும்பினால் புகார் மனுக்களை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, காஞ்சீபுரம் என்ற முகவரி மற்றும் ombudsman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story