பதவி ஆசை இல்லையென்றால் பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்? - எடப்பாடி பழனிசாமி


பதவி ஆசை இல்லையென்றால் பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்? - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 28 Aug 2022 9:46 PM IST (Updated: 28 Aug 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

பதவி ஆசை இல்லையென்றால் பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை செய்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.

சென்னை

முதல் அமைச்சர் ஆவதற்கோ, கட்சித் தலைவராவதற்கோ எனக்கு ஆசையில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்து குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-

"பதவி ஆசை இல்லையென்றால் பிறகு ஏன் இவ்வளவு பிரச்சனை செய்கிறார்? ஏன் தலைமை கழகத்திற்குள்ளே புகுந்து தலைமை கழகத்தை நொறுக்கி, தலைமை கழகத்திலிருக்கிற கம்ப்யூட்டர், அறைகளையெல்லாம் சேதப்படுத்தியது எதற்காக? எதுவுமே ஆசையில்லை என்றால் எதற்காக தேவையில்லாத பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story