"கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால்..." - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை


கால்வாய்களில் குப்பைகளை கொட்டினால்... - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
x

கால்வாய்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

சென்னை,

கடந்த வாரம் பெய்த கனமழையால் வடசென்னையில் ஒருசில இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக ஓட்டேரி நல்லான் கால்வாயில் மழைநீர் செல்லாததால், கால்வாயை தூர்வார சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதற்கான பணிகள் நடைபெறு வரும் நிலையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, குப்பைகளால் ஓட்டேரி நல்லான் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாதது தெரிய வந்தது. இந்த நிலையில், கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா தலைமையில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், கால்வாய் அடைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

கால்வாயில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து கேள்வி எழுப்பிய கூடுதல் தலைமை செயலாளர், குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


Next Story