சட்டத்துக்கு புறம்பாக ஸ்கேன் மூலம் பாலினம் கண்டுபிடிப்பு: கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது


சட்டத்துக்கு புறம்பாக ஸ்கேன் மூலம் பாலினம் கண்டுபிடிப்பு: கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த பெண் கைது
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு சட்டத்துக்கு புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக கருவை கலைத்த காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளநிலையில் 3-வதாக கர்ப்பமான அவர், ஸ்கேன் டெக்னீசியன் சுகுமாரன் என்பவர் மூலம் கருவில் இருப்பதும் பெண் குழந்தை என கண்டுபிடித்துள்ளார்.

தொடர்ந்து உமாராணி என்பவர் மூலம் மாத்திரைகள், உபகரணங்கள் வாங்கி கருக்கலைப்பு செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த உமாராணியை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் ஸ்கேன் செய்து பாலினத்தை கண்டறிவதற்காக மேலும் 5 கர்ப்பிணி பெண்கள் காத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த வீட்டை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஸ்கேன் டெக்னீசியன் சுகுமாரன் மற்றும் இடைத்தரகர் வேடி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story