"ஈபிஎஸ் -க்காக தீச்சட்டி எடுக்க போறேன்" நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு பேட்டி


ஈபிஎஸ் -க்காக தீச்சட்டி எடுக்க போறேன் நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு பேட்டி
x

எடப்பாடி பழனிசாமிக்காக தான் அக்னிச்சட்டி எடுக்கப்போவதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள முருகன் கோவிலில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு நிருபர்களிடம் கூறியதாவது:

மானாமதுரை அருகே உள்ள முருகன் கோவிலில் இன்று பால்குடம் திருவிழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைக்கிறேன். இதனை தொடர்ந்து சமயபுரம் முத்துமாரியம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கப்போறேன்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக ஆனதற்கும், அடுத்த முதல் அமைச்சராக ஆவதற்கும் நான் அக்னிசட்டி எடுக்கப்போறேன். கூடிய விரைவில் நேர்மையான நல்லாட்சி நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிசாமி வந்திருந்தால், கரண்ட் பில் அதிகரித்து இருக்காது. தற்போது அதிகரித்துள்ளது. வீட்டு வரியும் அதிகரித்துள்ளது. அவர் விரைவில் வருவார்.

அதிமுக பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



1 More update

Next Story