'நலமுடன் இருக்கிறேன்' - வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவு!


நலமுடன் இருக்கிறேன் - வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் பதிவு!
x
தினத்தந்தி 2 Nov 2023 12:00 PM IST (Updated: 2 Nov 2023 12:04 PM IST)
t-max-icont-min-icon

பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை,

பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் 'கொரோனா தொற்று காரணமாக கோவையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல் குறைந்துள்ளது. மற்ற அறிகுறிகள் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்.நலமுடன் இருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


Next Story