திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம் - ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை


திருக்குறளைப் போல் அதிகாரத்தை செயல்படுத்துகிறோம் - ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 Aug 2023 6:20 AM GMT (Updated: 19 Aug 2023 8:00 AM GMT)

கோவை கொடிசியாவில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

கோவை,

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருக்குறளைப் போல் நெறிப்படுத்தி அதிகாரத்தை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் அளித்த அதிகாரத்தை வானளாவியதாக நினைப்பதில்லை. கோவை தான் தமிழ்நாட்டின் மான்செஸ்டர். சமூக நீதியுடன் சமச்சீர் தொழில் வளர்ச்சி என்பதே அரசின் நோக்கம்.

இதுவரை 109 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.10 கோடி வரை ஆதார நிதி வழங்கியுள்ளோம். அனைவரையும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சியை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்டுத்தப்படுகின்றன. தமிழகத்தை புத்தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற மாநிலமாக மாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story