தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 9 பேர் கைது
தேவதானப்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலம் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் இருளப்பன் (வயது 34). கட்டிட தொழிலாளி. கடந்த 11-ந்தேதி அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின்போது முன்விரோதம் காரணமாக இவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் கார்த்திக் ராஜா, காமாட்சி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பதுங்கி இருந்த காமாட்சி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த தங்கப்பாண்டி (32), அலெக்ஸ் பாண்டியன் (25), நந்தகுமார் (25), மற்றொரு தங்கப்பாண்டி (27), சண்முகம் (65), ராஜேஸ்வரி (36), முத்துராஜா (26), பிரவீன் (25), பாக்கியம் (50) ஆகிய 9 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.