காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்கே.பி.ராமலிங்கம் பேட்டி


காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க கர்நாடக காங்கிரஸ் அரசை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்கே.பி.ராமலிங்கம் பேட்டி
x
தினத்தந்தி 10 Oct 2023 12:30 AM IST (Updated: 10 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் நேற்று பா.ஜனதா மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசியத்தையும், தெய்வீகத்தையும் முன்னிறுத்தி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சிகளை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார்.

கர்நாடகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது எந்த பிரச்சினையும் இல்லாமல் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேல்முறையீடு என்று செய்கிறாரே தவிர கர்நாடக முதல்-மந்திரியிடம் பேசி காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியானது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கூட்டணியில் தொடர்வோம் என்று கூட்டத்தில் இருந்து வெளியேறினர். அதேபோல் காவிரி பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடக காங்கிரஸ் அரசை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி இந்தியா கூட்டணி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story