தேவதானப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை திருட்டு
தேவதானப்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்
தேனி
தேவதானப்பட்டியை ேசர்ந்தவர் சரோஜா (வயது 57). கடந்த 20-ந் தேதி இவர், திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூரில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் 22-ந் தேதி இரவு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது சூட்கேசில் வைத்து இருந்த 7½ பவுன் நகைகள் மற்றும் ரூ.12 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதுகுறித்து சரோஜா தேவதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story