ஈரோடு மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம்
ஈரோடு மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறாா்.
ஈரோடு மாவட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அண்ணாமலை நடைபயணம்
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் தமிழகத்தில் நடைபயணம் ெசய்து வருகிறார். அவர் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்டத்துக்குட்பட்ட பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் அண்ணாமலை நடைபயணம் செய்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் அண்ணாமலை 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதன்படி அவர் வருகிற 25-ந் தேதி மதியம் 3 மணிக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். சிவகிரி குமரன் சிலை பகுதியில் மக்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் மாலை 6 மணிக்கு நடைபயணத்தை தொடங்குகிறார். தொடர்ந்து அண்ணா சிலை பகுதியில் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார்.
ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதிகளுக்கான சுற்றுப்பயணம் வருகிற 26-ந் தேதி நடக்கிறது. வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் மாலை 5 மணிக்கு அவர் நடைபயணத்தை தொடங்குகிறார். பிறகு சூரம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அண்ணாமலை பேசுகிறார்.
இந்த தகவலை பா.ஜனதா ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம் தெரிவித்து உள்ளார்.