தேனியில்அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு


தேனியில்அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனியில், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

தேனி நேரு சிலை சிக்னல் அருகில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், அம்பேத்கர் பிறந்த நாளில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்றனர். முன்னதாக அங்கு அம்பேத்கர் உருவப் பட்டத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் மாநில தலைவர் செல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமது சபி மற்றும் ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story