தேனியில் சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்


தேனியில்  சிறுமியின் சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
x

சிறுமியின் உயிரிழப்பு குறித்து நீதி கேட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக தோண்டிய குழியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்து ஹாசினி ராணி (வயது 8) என்ற சிறுமி கடந்த 6-ந்தேதி உயிரிழந்தார். இந்த சிறுமியின் உயிரிழப்பு குறித்து நீதி கேட்டு, தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நிறுவனர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணன், மாவட்ட செயலாளர் வனராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் பூங்கா கட்டுமான பணியில் அலட்சியமாக இருந்த ஒப்பந்ததாரர், பேரூராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கை தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் கொடுத்தனர்.


Next Story