தேனியில் தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி


தேனியில்  தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
x

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் தீக்குளிக்க முயன்றனர்

தேனி

தேனி அருகே பாலார்பட்டியை சேர்ந்த பொம்மையா மனைவி சரோஜா (வயது 67). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது மகள் வனிதாவுடன் வந்தார். அப்போது சரோஜா ஒரு பாட்டிலில் மண்எண்ணெய் எடுத்து வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு, மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை 2 பேரும் தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் விசாரித்தனர். அப்போது சரோஜா கூறுகையில், "என்னை எனது மகன், மருமகள் மற்றும் சிலர் சொத்துப் பிரச்சினையில் தாக்கினர். இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. எனது மகளையும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். அதை கண்டித்து தீக்குளிக்க முயன்றோம்" என்றார். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story