கன்னியாகுமரியில் 3-வது நாளாக படகு சேவை தாமதம்


கன்னியாகுமரியில்  3-வது நாளாக படகு சேவை தாமதம்
x

கன்னியாகுமரியில் 3-வது நாளாக படகு சேவை தாமதமாக நடந்தது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடல்நீர் மட்டம் தாழ்வு காரணமாக நேற்று வழக்கம் போல் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. கடல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து படகு போக்குவரத்து 2½ மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து 3-வது நாளாக படகு சேவை தாமதமாக தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story