பெரியகுளத்தில் மின்தடையால் பொதுமக்கள் அவதி


பெரியகுளத்தில்  மின்தடையால் பொதுமக்கள் அவதி
x

பெரியகுளத்தில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தேனி

பெரியகுளம் நகர், வடகரை பழைய பஸ் நிலையம், மதுரை சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீஸ் நிலையம், வங்கி, வணிக நிறுவனங்கள் மற்றும் மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடிய கடைகளில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து மின்சாரத்துறை ஊழியர்கள் கூறுகையில், பெரியகுளம்-மதுரை சாலையில் விரிவாக்க பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த சாலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடைபெறுவதால் மின்சாரம் தடை செய்யப்பட்டது என்றனர். முன்னறிவிப்பு இன்றி மின்தடை செய்யப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.


Related Tags :
Next Story