பொன்னேரியில் மது போதையில் மனைவி உள்பட 3 பேருக்கு வெட்டு - வாலிபர் கைது


பொன்னேரியில் மது போதையில் மனைவி உள்பட 3 பேருக்கு வெட்டு - வாலிபர் கைது
x

பொன்னேரியில் மது போதையில் மனைவி உள்பட 3 பேரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தேவமா நகரில் வசித்து வருபவர் சங்கர் (வயது 26). இவர் சின்னக்காவனம் பர்மா நகரை சேர்ந்த சந்தியா (20) என்பவரை திருமணம் செய்து கொண்டார். சத்தியா பெற்றோர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது பிடிக்காமல் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் சத்தியாவை அவரது பெற்றோர் வீட்டில் சங்கர் விட்டு வந்தார். பின்னர் இரவு குடித்து விட்டு மாமியார் வீட்டு சென்ற சங்கர் மது போதையில் மனைவி சந்தியா, மாமியார் வசந்தி, மைத்துனர் குமரேசன் ஆகியோரை அசிங்கமாக தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டார். தகறாரில் 3 பேரையும் சங்கர் கத்தியால் வெட்டி விட்டு தப்பினார்.

படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். பின்னர் அவரை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story