தனியார் கம்பெனியில் போலி பணியாளர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ. 6.95 கோடி மோசடி..!


தனியார் கம்பெனியில் போலி பணியாளர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ. 6.95 கோடி மோசடி..!
x

அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் போலி பணியாளர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ. 6 கோடி 95 லட்சம் பணத்தை கையாடல் செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடி:

ஆவடி அடுத்த அயப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37) அம்பத்தூர் எஸ்டேட்டில் தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இதே நிறுவனத்தில் பெரியார் நகரை சேர்ந்த டைசிகஸ் விவேக் குமார் (32), நாகப்பட்டினத்தை சேர்ந்த குமரவேல் (29), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (29), சுரேஷ் (32), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (வயது 32), திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த திலீப் குமார் (வயது 32) ஆகிய 6 பேர் மென்பொருள் பணி ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் நிறுவனத்தின் பணியாளர்களின் தனிப்பட்ட கோப்புகளை பராமரித்து வந்தனர். ஊதிய பட்டியல், பிஎப் உரிமை கோரல்கள், இறுதி தீர்வு மற்றும் நிதி மேலாண்மை கட்டுப்பாட்டு ஆய்வு தணிக்கை 2020 ஆகியவற்றின் சம்பந்தமாக வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் 126 போலி பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணி புரிவது போல் பட்டியலை தயாரித்து தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ.6 கோடியே 95 லட்சம் வரை நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்துள்ளனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோபிநாத் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணைக்கு பிறகு டைசிகஸ் விவேக்குமார், தாமோதரன், சுரேஷ், செல்வகுமார், ஆகியோரை ஏற்கனவே கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த குமாரவேல் என்பவரை இன்று கைது அவர் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்.


Next Story