புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை


புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
x

புஞ்சைபுளியம்பட்டியில் இந்து முன்னணி நிர்வாகி கைதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டியில் கடந்த 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் செந்தில்குமார், திருப்பூர் மாநகர செயலாளர் கேசவன், ஈரோடு மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் ஆகியோர் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தி.மு.க. நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம் அளித்த புகாரின் பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இதுதொடர்பாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் செல்வராஜை போலீசார் கைது செய்து புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் முருகன் தலைமையில் இந்து முன்னணியினர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மாவட்ட துணை தலைவர் செல்வராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து போலீஸ் நிைலயத்ைத முற்றுகையிட்டு தரையில் உட்கார்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story