சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு


சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 10:32 AM GMT)

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியர் பணியிடங்களுக்கு, பி.எஸ்.சி. நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.கலையரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

செவிலியர்

சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேலும், டேட்டா புளோ மற்றும் எச்.ஆர்டி சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்த நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com-ல் கண்டுபயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள 044-22505886, 044-22502267 என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களிலும், 9566239685, 6379179200 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாக சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்ப படிவத்தை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பதிவு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும். இந்த பணிக்கு தேர்வுபெறும் பணியாளர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரத்து 400 மட்டும் சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story