தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஆயிரத்து 846 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று மொத்தம் 26 ஆயிரத்து 613 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டது. இதில் ஆயிரத்து 846 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,153 ல் இருந்து 14,714 ஆக குறைந்தது. ஒரே நாளில் 2,225 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனாவால் இன்று எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. மொத்த இறப்பு எண்ணிக்கை 38,032 ஆக உள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 466 இல் இருந்து 409 ஆக குறைந்தது.
செங்கல்பட்டு -194 , கோவை -176, திருவள்ளூர் -82, காஞ்சிபுரம் -68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story