திருவண்ணாமலையில் 88.28 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


திருவண்ணாமலையில் 88.28 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x

திருவண்ணாமலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 88.28 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை,

10, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடந்து முடிந்தது. இத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பிளஸ் 2 பொதுத் தேர்வை 14,036 மாணவர்கள், 14,182 மாணவிகள் என மொத்தம் 28,218 பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. பிளஸ் 2 தேர்வில் 9.12 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8.21 லடசம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 28,218 பேரில் 24,912 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 11,714 பேரும் (83.46 சதவீதம்) , மாணவிகள் 13,198 பேரும் (93.06 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி 88.28 சதவீதம் ஆகும். இச்சதவீதம் கடந்த 2019-2020 ஆண்டைக் காட்டிலும் (87.77 சதவீதம்) அதிகம் ஆகும்.


Next Story