திருச்செந்தூரில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்செந்தூரில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், எவிடன்ஸ் அமைப்பும் இணைந்து தமிழகமும், சாதிய வன்கொடுமைகளும் என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. இதற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் மகேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சிய மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், மீனவரணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்கத்தமிழன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் ஆதவன் வரவேற்று பேசினார். எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கதிர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில், கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்குட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் டிலைட்டா, மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். எவிடன்ஸ் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எவிடென்ஸ் கென்னடி நன்றி கூறினார்.