கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 இடங்களில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது என கலெக்டர் தெரிவித்தார்.
மருத்துவ முகாம்
இதுகுறித்து கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-
கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்திட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டடுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
காரைக்குடி, செஞ்சை பகுதியில் உள்ள ஆலங்குடியார் உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் லிம்ரா மெட்ரிக்குலேசன் பள்ளி, திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாம்களில் சிறப்பு மருத்துவ பிரிவுகள், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளும் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இலவச சிகிச்சை
பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்படவுள்ளது. இத்துடன் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் வழங்கப்பட உள்ளது. மருத்துவர்கள் மூலம் நோய் கண்டறியப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சைகளை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் அரசு பதிவு பெற்ற முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் செயல்படும் ஆஸ்பத்திரிகள் மூலமாகவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.