மதுரையில் 10 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை


மதுரையில் 10 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 21 July 2022 7:18 AM IST (Updated: 21 July 2022 7:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் 10 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மதுரை,

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஜெயபாரத், அன்னை பாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தனர்.

மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story