ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை


ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
x

ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

திருச்சி

மணப்பாறை:

புதுக்கோட்டையை சேர்ந்தவர் பாண்டிதுரை. இவர் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகளில் ஒளிரும் விளக்குகள் அமைத்தல், ஊர் பெயர் பலகை பதாகைகள் அமைத்தல், சாலையில் வெள்ளை கோடு போடுதல் உள்ளிட்ட பணிகளை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இவரது பிரதான அலுவலகம் புதுக்கோட்டையில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகம் உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று 2-வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன் (47). ஒப்பந்ததாரர். இவர், கடந்த ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின் எந்த ஆவணங்களும் கைப்பற்றபடவில்லை என்று கூறப்படுகிறது. இவர் பாண்டிதுரையின் மைத்துனர் ஆவார். பாண்டிதுரை வீட்டில் சோதனை நடத்தியதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story