தொழுதூர் அணைக்கட்டிற்கு நீர்வரத்து அதிகரிப்பு


தொழுதூர் அணைக்கட்டிற்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:48 PM GMT)

தொழுதூர் அணைக்கட்டிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடலூர்

ராமநத்தம்,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை, கிருஷ்ணாபுரம், லாடபுரம், களத்தூர் ஆகிய பகுதிகளில் பெய்த கனமழையாலும் ஆத்தூர் பகுதிகளில் பெய்த கனமழையாலும் நேற்று அதிகாலை முதல் தொழுதூர் அணைக்கட்டிற்கு தண்ணீர் வரத்து அதிகாித்தது. அதாவது வினாடிக்கு 3 ஆயிரத்து 844 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் ஒகலூர் ஏரிக்கு வினாடிக்கு 815 கன அடி தண்ணீரும், வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 918 கன அடியும், வினாடிக்கு 111 கன அடி தண்ணீர் வெள்ளாற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளாறு கரையோரம் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story