சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு - ரெயில்வே நிர்வாகம்


சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிப்பு - ரெயில்வே நிர்வாகம்
x

சென்னை-டெல்லி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னை,

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய நடைமுறை திட்டங்களை அமல்படுத்த ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்தவகையில் தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு ரெயில்கள் 130 கி.மீ வேகத்தில் செல்லும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் அக்டோபர் 1-ந்தேதி முதல் ரெயில் சேவைகளின் வேகம் அதிகரிக்கப்பட்ட ரெயில்கள் வருமாறு:-

சென்னை - டெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் பயண நேரம் 90 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை - டெல்லி இடையே இயக்கப்படும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பயண நேரம் 70 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

திருப்பதி-சென்னை இடையே இயகப்படும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் நேரம் குறைக்கப்பட்டது.

கோவை-சென்னை இடையே இயக்கப்படும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் அமதாபாத்-சென்னை இடையே இயக்கப்படும் 'ஹம்சபர்' எக்ஸ்பிரஸ் 25 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் ஏக்தாநகர்-சென்னை எக்ஸ்பிரஸ் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

சென்னை- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 10 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

கொல்லம்-எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் 15 நிமிடம் சேவை நேரம் குறைக்கப்படுகிறது.

இந்த ரெயில் சேவைகளின் வேகம் அதிகரிக்கபட்டுள்ளதால், இந்த தடங்களில் பயணிக்கும் ரெயில் பயணிகளின் பயண நேரம் குறைந்துள்ளது.


Next Story