திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு


திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

நீர்வரத்து அதிகரிப்பால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நிரம்பியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி அதில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வினாடிக்கு சுமார் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் திருக்கோவிலூரையும் அரகண்டநல்லூரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஏற்கனவே இந்த தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இருந்தாலும் பொதுமக்கள் நடைபாதை போக்குவரத்துக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தனர். தற்போது பாலம் மூழ்கி விட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆற்றின் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story