மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x

மேட்டூர் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர்,

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து குறைந்து வருகிறது. தொடர்ந்து 3-வது நாளாக இன்று நீர்வரத்து 9,500 கன அடியாக நீடித்தது.

காவிரியில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடைதொடர்ந்து நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து சற்று அதிகரித்து.

இன்று காலை வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 900 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 118.72 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து 118.75 அடியாக உள்ளது.


Next Story