சுதந்திர தின விழா கொண்டாட்டம்


சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின அமுத பெரு விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 75-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். சக்திவேல் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார். விழாவில் குடும்ப நல நீதிபதி செல்வம், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தலைமை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், சார்பு நீதிபதி செந்தில்குமார், வக்கீல்கள் சங்க தலைவர் கோவிந்தராஜூலு, செயலாளர் ராஜா விஸ்வநாத், வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் நகராட்சி தலைவர் பரிதா நவாப் தேசிய கொடி ஏற்றினார். என் குப்பை என் பொறுப்பு என்கிற தலைப்பில் நகராட்சிக்குட்பட்ட, 12 பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சரவணன், துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலை வாய்ப்பு அலுவலகம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தேசிய கொடியை ஏற்றினார். இதில் அலுவலக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். குந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள் ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் குமரேசன், துணைத்தலைவர் தீபா எல்லப்பன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய குழு தலைவர் உஷாராணி குமரேசன் தேசிய கொடி ஏற்றி வைத்து, காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவப்பிரகாசம், மகேஷ் குமரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமரேசன், வெள்ளியரசு, ஆனந்தி, மாது, சிவகாமி, சரவணன், தி.மு.க. நகர அவைத்தலைவர் தணிகை குமரன், இளைஞர் அணி நிர்வாகி அசோக், ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திர பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி தலைவர் அமானுல்லா தேசிய கொடி ஏற்றி வைத்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பேரூராட்சி அலுவலர்கள் சேகர், செண்பக பாண்டியன், பொறியாளர் மகேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் சீருடை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மத்தூர்

மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ்குமார் தேசிய கொடி ஏற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேடி வரவேற்று பேசினார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முருகன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story