ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம்:
நாடு முழுவதும் 75 வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றினார்.
அதை தொடர்ந்து மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ராமேஸ்வரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகளின் பறையாட்டம் நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
மேலும் பள்ளி சிறுமிகள் மற்றும் மாணவிகள் மல்லர் கயிற்றில் ஏறி அந்தரத்தில் தொங்கி யோகா செய்து அசத்தினர். கயிற்றில் ஏரி அந்தரத்தில் தொங்கி மாணவிகள் யோகா செய்து அசத்தியதை மாவட்ட கலெக்டர் ஜான்டாமஸ்வர்கீஷ், டி.ஐ.ஜி மயில்வாகனன் மற்றும் அங்கு வந்திருந்த பார்வையாளர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டினர்.