தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் சுதந்திர தின விழா


தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் சுதந்திர தின விழா
x

சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூர் சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நடந்த 77-வது சுதந்திர தினவிழாவில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர், தனலட்சுமி சீனிவாசன் பல் மருத்துவக்கல்லூரி முதல்வர் மற்றும் சீனிவாசன் மருந்தியல் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நிவானி கதிரவன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனைதொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

1 More update

Next Story