செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா - கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மைதானத்தில் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங்குடன் காவல் துறையின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்,

அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கல்வி தொகையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ12 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் டிராக்டர்களும் வழங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.70 ஆயிரத்திற்கான நிதிஉதவியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையையும் முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி 10 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து 16 பயனாளிகளுக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு சலவைபெட்டி உள்ளிட்ட மொத்தம் 66 பயனாளிகளுக்கு ரூ.32 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டவருவாய் அலுவலர் மேனுவேல் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) இப்ராஹீம், வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை உதவி இயக்குனர் சாந்தா செலின் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story