தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்


தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை

சுதந்திர தின விழா

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் துணை தலைவர் ராஜேஸ்வரி பழனிக்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேரூராட்சி இளநிலை உதவி அலுவலர் ரேவதி, கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி ஜே.குரூப்ஸ் கல்லூரியில் நிறுவனத்தலைவர் ஜேசுதாஸ் கொடியேற்றி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆலங்குடி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், கல்லாலங்குடி ஸ்ரீ சுபாபாரதி மெட்ரிக் பள்ளியின் தாளாளர்கள் கருப்பையா, விஜயா ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

பரிசு

ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான கே.பி.கே.டி. தங்கமணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தலைமை ஆசிரியர் கவுசல்யா மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்தம்பி தலைமையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மாடர்ன் மெட்ரிக் பள்ளி

ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் தாளாளர் இளந்தென்றல், முதல்வர் மதியழகன், பள்ளி நிறுவனர் சண்முகம் ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

ஆலங்குடி புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் ஆர்.கே.அடிகளார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சூசைராஜ் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அறந்தாங்கி

அறந்தாங்கி நகராட்சி வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. நகர்மன்ற தலைவர் ஆனந்த் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் செந்தில்குமார், கவுன்சிலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சாய் லாரல் சி.பி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாக இயக்குனர் சஹானா தலைமையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் பள்ளியின் தாளாளர் பாலசஞ்சீவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மெட்ரிக் பள்ளிகள்

எல்.என்.புரத்தில் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் சேக் சுல்தான் தலைமையிலும், கட்டுமாவடி சாலையில் உள்ள சேக் பாத்திமா மெட்ரிக் மேல்நிலை மகளிர் பள்ளியில் பள்ளி நிர்வாக தலைவர் சேக் பாத்திமா தலைமையிலும் அறந்தாங்கி ஷிவானி சி.பி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் தாளாளர் முத்து உடையார் தலைமையிலும், அறந்தாங்கி அருகே காரைக்குடி சாலையில் அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் நாகராஜன் தலைமையிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கட்டுமாவடி சாலையில் உள்ள கூத்தங்குடி கிராமத்தில் அமிர்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தாளாளர் சந்திரமோகன் தலைமையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

இதில் நிர்வாக இயக்குனர்கள் டாக்டர் சிவசாமி, ராமையா, சுப்புராவ், முருகநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story