இந்தியா-ஆஸி. ஒருநாள் போட்டியையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்


இந்தியா-ஆஸி. ஒருநாள் போட்டியையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 8 Oct 2023 9:18 AM IST (Updated: 8 Oct 2023 10:28 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதையொட்டி, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சென்னை,

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இந்தியா- ஆஸ்திரேலியா இடையே உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று விக்டோரியா ஹாஸ்டல் ரோடு, பெல்ஸ் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை போன்ற பகுதிகளில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியையொட்டி, சேப்பாக்கம் பகுதியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.


Next Story