2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் - அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் - அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
x

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா அனைத்து விதங்களிலும் வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் வாசுதேவ குடும்பமாக மாறவேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா அனைத்து விதங்களிலும் வளர்ச்சியடைந்து உலகம் முழுவதும் வாசுதேவ குடும்பமாக மாறவேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன், தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்துகொண்டனர்.

இதில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசிய மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து, அம்பேத்கரும் மோடியும் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். மேடையில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, அம்பேத்கர் இன்றும் சட்டத்தின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும், இந்தியா உடையாமல் இருந்ததில் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது என்றும் கூறியுள்ளார்.

இந்த உலகம் ஒரே குடும்பமான வாசுதேவ குடும்பமாக மாற வேண்டும் என்றும், அதற்கு அனைத்து விதத்திலும், இந்தியா வளர வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story