காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏழ்மையாக இருந்தது - வானதி சீனிவாசன்


காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏழ்மையாக இருந்தது - வானதி சீனிவாசன்
x

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏழ்மையாக இருந்தது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் இந்தியா ஏழ்மையாக இருந்தது, மேலும் ஏழையாகிக் கொண்டே இருந்தது. 1991ல் இந்தியா திவாலாகும் நிலையில் இருந்தது. ஆனால் 2014-க்குப் பிறகு உலகின் முதல் 5 பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

காங்கிரஸ் மந்திரத்தை நம்பியது, ஆனால் பாஜக சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தை நம்பியது. இந்த கடின உழைப்பும் வளர்ச்சியும் அனைத்து புதிய சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சியில் எதிரொலிக்கும். 2028-ல் காங்கிரஸ் புதிய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, உலக அளவில் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story