'நிலவில் குடியேறுவதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கும்' - மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை


நிலவில் குடியேறுவதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கும் - மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2023 2:09 PM GMT (Updated: 8 Oct 2023 3:17 PM GMT)

நிலவில் குடியேறுவதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கும் என்று மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரி நூற்றாண்டு நிறைவு விழாவில் முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசியபோது அவர் கூறியதாவது;-

"நிலவில் குடியேறுவதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கி உலக நாடுகளுக்கு தலைமை வகிக்கும். எதுவுமே இல்லாத வளைகுடா நாடுகளில், எண்ணெய் வளம் மட்டும் இருந்ததால் எல்லாம் அங்கு சென்று சேர்ந்தது. அந்த எண்ணெய் வளத்தை மிஞ்சிய ஒரு வளம் நிலவில் இருப்பதாக நான் கருதுகிறேன்.

நம் அருகில் இருக்கும் குலசேகரப்பட்டினத்தில் இருந்து நிலவுக்கு சென்று வரக்கூடிய நிலையை நம்மால் உருவாக்க முடியும். அதில் நம்முடைய பங்கும் இருக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story