கடலூரில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி: ஜனவரி 4-ந்தேதி தொடங்குகிறது


கடலூரில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி: ஜனவரி 4-ந்தேதி தொடங்குகிறது
x

கோப்புப்படம் 

பேரணி தளத்திற்கு வரும் பங்கேற்பாளர்கள், 18 வகையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை தலைமையக ஆட்சேர்ப்பு மண்டலத்தின் கீழ், இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி, கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பேரணி தளத்திற்கு வரும் பங்கேற்பாளர்கள், ஹால்டிக்கெட், கல்வி சான்று, போலீஸ் நன்னடத்தை சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, ஆதார்கார்டு, பான் கார்டு, விளையாட்டு சான்று, என்.சி.சி. சான்று உள்பட 18 வகையான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்க வேண்டும்.

ராணுவ ஆட்சேர்ப்பு பேரணி தொடர்பான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story