இந்திய குடியரசு கட்சி ஆர்ப்பாட்டம்
சேலத்தில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய குடியரசு கட்சியின் கவாய் பிரிவு சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் பொன்னுதம்பி தலைமை தாங்கினார். சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜீ, மாநில இணை செயலாளர் அருணகிரி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் அருகே உள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு அரசு வழங்கிய நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். பல முறை கோரிக்கை வைத்தும் ஆக்கிரமிப்பை அகற்றாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால், வெள்ளையம்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வருகிற 9-ந்தேதி (திங்கட்கிழமை) குடிசை அமைக்கும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.