கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகம் பெருகி வருகிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு


கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகம் பெருகி வருகிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு
x

கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகம் பெருகி வருகிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

சென்னை,

2 நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை கவர்னர், முதல்-அமைச்சர் உள்பட முக்கிய தலைவர்கள் விமானநிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றனர்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினார்.

இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறுகையில்,

நீண்ட கடற்கரைகளை கொண்ட நாடு இந்தியா. கடல்சார் வளங்கள் மூலம் இந்தியாவின் வணிகமும், வளர்ச்சியும் பெருகி வருகிறது. மேலும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story