மழை காரணமாக வரத்து குறைந்தது:ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை


மழை காரணமாக  வரத்து குறைந்தது:ஈரோடு மார்க்கெட்டில்  சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை
x
தினத்தந்தி 26 May 2023 9:01 PM GMT (Updated: 26 May 2023 9:01 PM GMT)

மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.

ஈரோடு

மழை காரணமாக வரத்து குறைந்து ஈரோடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.

சின்ன வெங்காயம்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக சில காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விலை தற்போது மெல்லமெல்ல உயர தொடங்கி உள்ளது.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஒட்டன்சத்திரம், தாராபுரம், தாளவாடி, ராசிபுரம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை போன்ற பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது.

விலை உயர்வு

தினமும் 20 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்த நிலையில் நேற்று வெறும் 6 டன் சின்ன வெங்காயம் மட்டுமே வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்ததால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் சின்ன வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. வரும் நாட்களில் மழை பெய்தால் சின்னவெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story