தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்..!
தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராயும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர்கள் செயல்பாடுகளின் அடிப்படையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் மேலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நிர்வாக வசதிக்காக அமைச்சர்கள் மற்றும் துறைச்செயலாளர்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. ஆட்சியமைத்த பிறகு ஏற்கனவே 2 முறை அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மே 2ஆம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.