கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்


கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்
x

கும்பகோணம் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அரசு பள்ளி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

பந்தநல்லூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவர்கள் பலர் நேற்று பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். பில்லுமாங்குடி என்ற இடத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து மட்டை ஒன்று திடீரென கீழே விழுந்தது.

மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்

அதில் இருந்த கதண்டுகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவ, மாணவிகள் மற்றும் அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டி, விரட்டி கடிக்க தொடங்கியது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக காமாட்சிபுரம் அருகே கோணுளாம்பள்ளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கதண்டுகள் அழிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த பகுதியில் கூடு கட்டியிருந்த கதண்டுகளை தீ வைத்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story