செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்


செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்
x

செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில துணைத்தலைவரும், முன்னாள் ராணுவ அலுவலருமான பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை விரைவில் தொடங்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வேப்பந்தட்டை மற்றும் குன்னம் ஆகிய தாலுகா தலைநகரங்களில் வட்ட அளவிலான விளையாட்டு மைதானம் அமைத்து இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திட ஊக்குவிக்க வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இடப்பற்றாக்குறையால் அதிகளவில் வாகனங்கள் வெளிப்புற பகுதியில் நிறுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க கூடுதலாக இருசக்கர வாகன நிறுத்தும் நிலையம் அமைத்திட வேண்டும். செஞ்சேரி-சிறுவாச்சூர் இடையே திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்திடவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story