திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நோயாளிகளுக்கான உணவை சாப்பிட்டு பார்த்தார்.

திருச்சி,

திருச்சி ராம்ஜி நகரில் நேற்று தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான கூட்டம் முடிந்ததும், அவர் திருச்சி பெரிய மிளகுபாறையில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு நேரில் சென்று நலவாழ்வு மையத்தின் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள டாக்டர்கள் மற்றும் நர்சுகளிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகிச்சை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கு நேரில் சென்று அங்கு தயாரிக்கப்பட்டு வரும் உணவினை சாப்பிட்டு பார்த்து, தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர், நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

1 More update

Next Story